மனித கடத்தல் விரோத சங்க அமைப்பு தொடக்கம்


மனித கடத்தல் விரோத சங்க அமைப்பு தொடக்கம்
x

அரியலூரில் மனித கடத்தல் விரோத சங்க அமைப்பு தொடங்கப்பட்டது.

அரியலூர்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட போலீசார், அரியலூர் அரசு கலைக்கல்லூரி, சர்வதேச சட்டப்பணிகள் இணைந்து "மனித கடத்தல் விரோத சங்கம்" என்ற அமைப்பு நேற்று தொடங்கியது.

இதையடுத்து, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் சிறப்புரை வழங்கினார். அதன்பின் மனித கடத்தல் விரோத சங்கத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மிக் ஆஸ்ட்டின் எடுத்துரைத்தார். மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் சட்டங்கள் பற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரபு விளக்கவுரை அளித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் மலர்விழி வரவேற்றார். முடிவில் அருள்தாஸ் நன்றி கூறினார்.


Next Story