கள்ளக்குறிச்சியில் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது


கள்ளக்குறிச்சியில் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

விழிப்புணர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2-ம் காலாண்டுக்கான ஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வு

கூட்டத்தின்போது கலெக்டர் ஷ்ரவன்குமார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவர், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகள் அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்தார்.

கல்வி தரத்தை உயர்த்தவேண்டும்

அதன்பிறகு கூட்டத்தில் அவர் பேசுகையில், வரும் காலங்களில் வன்கொடுமைகள் நடக்காத வகையில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

இதில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story