ஆண்டிப்பட்டிகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை


ஆண்டிப்பட்டிகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:45 PM GMT)

ஆண்டிப்பட்டி காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

தேனி

ஆண்டிப்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து 48 நாட்களும் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இந்நிலையில் 48-ம் நாள் மண்டல பூஜை கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story