வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x

கரூர் அருகே வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரூர்

முயல்களை வேட்டையாட முயற்சி

கரூர் மாவட்ட வனஅலுவலர் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் தண்டபாணி, வனவர் சாமியப்பன் தலைமையிலான வனச்சரக குழுவினர் ரெங்கமலை பகுதியில் உள்ள பள்ளமருதப்பட்டி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒருவர் சந்ேதகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அரவக்குறிச்சி புங்கம்பாடியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 45) என்பதும், வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.

அபராதம் விதிப்பு

இதையடுத்து பாஸ்கரன் மீது வழக்குப்பதிந்து, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் முயலை வேட்டையாடுவதற்காக அவர்் வைத்திருந்த உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுபோன்று வனப்பகுதியில் யாரேனும் விலங்குகளை வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story