அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்

பல்லடம்

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்லடம் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில், பொங்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், தெற்கு பாளையம் மாரியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன், பெரியகான்டியம்மன், ராசாகவுண்டம் பாளையம் ராஜ மாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். கோவில்களில் சிறப்பு பூஜைக்கு பின் கூழ், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அவினாசியை அடுத்த ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் சாமி வலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



Next Story