சிறுதானிய பயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்


சிறுதானிய பயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்
x

சிறுதானிய பயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுதானிய உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க வேளாண்மைத் துறையின் மூலம் அனைத்து கிராமங்களிலும் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வறட்சியை தாங்கி வளர்தல், நிறைந்த ஊட்டச்சத்து, குறைந்த பூச்சி நோய் தாக்குதல், குறுகிய காலப்பயிர் மற்றும் குறைந்த இடுபொருள் செலவு ஆகியவை சிறுதானியங்களின் சிறப்பம்சங்களாகும். சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி பிரதான பயிராக தமிழகத்தில் கேழ்வரகு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு மற்றும் வரகு ஆகிய சிறுதானிய பயிர்கள் ஆண்டுக்கு சராசரியாக 65 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறுதானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு மற்றும் குதிரை வாலி போன்ற பயிர்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து விவசாய பயிற்சிகளிலும் விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கவும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் சிறுதானிய பயிரின் முக்கியத்துவத்தை அனைத்து துறை அலுவலர்களும் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story