5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்


5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராமநாதபுரம்

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகை மடக்கினர். படகில் இருந்த இலங்கை நீர்க்கொழும்பு முன்னக்கரையை சேர்ந்த அந்தோணி பெனில் (வயது 59), ரஞ்சித் சிரான்(45), ஆனந்தகுமார்(53), அந்தோணி ஜெயராஜ்குரூஸ்(45), வர்ணகுல சூரிய விக்டர் இம்மானுவேல்(62) ஆகியோரை கைது செய்தனர். கைதான 5 பேர் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். நீதிபதி கவிதா மேற்கண்ட 5 பேரையும் வரும் 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

1 More update

Next Story