அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வயர் மேன் பிரிவிற்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏ.சி. டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக், ஆட்டோ பாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி சேர்க்கைக்கு வரும்போது செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். அரசின் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story