கோவையில் 839 இடங்களில் விண்ணப்பதிவு முகாம்


கோவையில் 839 இடங்களில் விண்ணப்பதிவு முகாம்
x
தினத்தந்தி 25 July 2023 1:00 AM IST (Updated: 25 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 839 இடங்களில் விண்ணப்பதிவு முகாம்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நேற்று 839 இடங்களில் நடைபெற்ற விண்ணப்பதிவு முகாமில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் விண்ணப்பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன்கார்டுகளுக்கு 1,401 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முதற்கட்டமாக 839 ரேஷன் கடைகள் மூலமாகவும், 2-ம் கட்டமாக 532 ரேஷன் கடைகள் மூலமாகவும் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

ஆர்வத்துடன் குவிந்த பெண்கள்

இதில் முதற்கட்டமாக 839 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு கடந்த சில நாட்களாக விண்ணப்ப வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இந்த டோக்கனில் விண்ணப்பதாரர்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று முதற்கட்டமாக நடைபெற்ற முகாமில் அழைக்கப்பட்டிருந்த பெண்கள் மட்டும் காலை முதல் ஆர்வத்துடன் குவிந்தனர்.

வெயில், மழையை கருத்தில் கொண்டு விண்ணப்ப பதிவு நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் பந்தல்கள் போடப்பட்டு இருந்தன. மேலும் பெண்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. பெண்கள் தங்களின் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி சேமிப்பு கணக்கு அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு வந்தனர்.

பயோமெட்ரிக் எந்திரம்

விண்ணப்ப பதிவிற்கு வந்திருந்த பெண்களுக்கு உதவ அங்கு உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உதவியாளர்கள் மூலம் பெண்கள் தங்களது விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்தனர். இதன்பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களின் விண்ணப்படிவங்களை பெற்று பயோமெட்ரிக் எந்திரம் மூலம் அவர்களின் கைரேகயை பதிவு செய்தனர். அப்போது ஒரு சில முகாம்களில் பயோ மெட்ரிக் எந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் விண்ணப்பதிவு முகாம் தொடங்க தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து தொழில்நுட்பனர்கள் உதவியுடன் சரி செய்யப்பட்டு, பின்னர் கைரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்றது. கைரேகை பதிவாகத பெண்களுக்கு அவர்களின் ஆதார் கார்டுன் இணைக்கப்பட்டு உள்ள செல்போன் எண் மூலம் ஒ.டி.பி. பெற்று பதிவு செய்யப்பட்டது. முதல் நாளில் ஒரு முகாமில் அதிகபட்சம் 60 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. முதல் நாளில் எவ்வித பிரச்சினையும் இன்றி விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம் இன்று தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் ஒரு சில இடங்களில் பயோமெட்ரிக் எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. பின்னர் அந்த எந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின் விண்ணப்பதிவு முகாம் விறு, விறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான பெண்கள் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்கிருந்த பெண் உதவியாளர்கள் செய்தனர். வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முதற்கட்ட முகாம் வருகிற 4-ந் தேதி முடிவடைகிறது. இதன்பின்னர் 2-ம் கட்ட விண்ணப்பதிவு முகாம் 5-ந் தேதி தொடங்கும். இதில் 532 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட பெண்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story