கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியதுகலெக்டர் பழனி பார்வையிட்டார்


கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியதுகலெக்டர் பழனி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது. இம்முகாமை கலெக்டர் பழனி பார்வையிட்டார்.

விழுப்புரம்


கோலியனூர்,

தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும்பொருட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இம்முகாமானது தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

கலெக்டர் பார்வையிட்டார்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது நடந்து வரும் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் 690 இடங்களில் நடந்து வருகிறது. இம்முகாமில் 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண்ணில் குறிப்பிடப்பட்ட நாள், நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரம் மற்றும் ஆவணங்களோடு சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், இல்லம் தேடிக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story