கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்விக்கிரவாண்டியில் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விக்கிரவாண்டியில் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2-வது கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இப்பணி விக்கிரவாண்டி தாலுகாவில் 137 மையங்களில் நடைபெற்றது. அய்யூர் அகரம், சிந்தாமணி, அய்யங் கோவில் பட்டு, முத்தம்பாளையம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஒன்றிய செயலாளர் ரவிதுரை, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கோவிந்தன், மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி புருஷோத்தமன், கட்சி நிர்வாகிகள் சந்திரன், சுப்பிரமணி ,பன்னீர், அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.