காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்


காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
x

காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். மருந்து கிடங்குகளில் தடுப்பூசி மருந்து மற்றும் திட்டம் சார்ந்த மருந்து பொருட்களை உரிய வெப்ப நிலையில் முறையாக பராமரித்து சீராக வினியோகித்திட தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். நடமாடும் மருத்துவக்குழு மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மக்கள் நலன் கருதி மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிகைக்கேற்ப மருத்துவ குறியீட்டின் படி கூடுதல் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தாளுனர்களுக்கு, இயக்குனரகங்களுக்கு உள்ளேயும் மற்றும் இயக்குனரகங்களுக்கு இடையிலும் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை அரசாணை 131-ன் படி நடத்திட வேண்டும். மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்கிட மக்கள் நலன்கருதி கடந்த ஆண்டை விட 60 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி உரிய அரசாணை வழங்கிட வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.


Next Story