விண்ணப்பம் சரிபார்ப்பு 95 சதவீதம் நிறைவு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி 95 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்து உள்ளது
இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பெண் கள் விண்ணப்பிக்க பதிவு முகாம் கோவை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றது.
இதில் 6 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். பெண்கள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், மின்மீட்டர் அளவீடு குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தனர்
. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் வழங்கப்பட்டு உள்ள விபரங்கள் சரியானதா? என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 6 லட்சத்து 90 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு ரேஷன்கார்டிற்கு ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தற்போது விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி 95 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்து உள்ளது என்றார்.