தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Online-ல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட 7.6.2023 கடைசி நாளாகும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்திடவும் கீழ் குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

www.skilltraining.tn.gov.in. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.6.2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம். செல்போன் எண்: 9789242292 9677258519, 8608728554 ஆகிய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story