செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 2022-23 -ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

மணிமேகலை விருது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் ஆணைப்படி 2022-23-ஆம் ஆண்டு ஊரக மற்றும் நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், நகர்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள், சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மற்றும் சிறந்த சுய உதவிக்குழுக்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது.

25-ந்தேதிக்குள்

சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு விருதை பெற ஜூலை 1-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் முழுமை பெற்றும், சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள சுய உதவி குழுக்ககளில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும். மேலும் இந்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 20 முறை கூட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.

சிறந்த மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வருகிற ஜூலை 1-ந்தேதிக்குள் உதவிக்குழுக்களை ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகியும், 2-வது முறை தர ஆய்வில் வெற்றி பெற்றும் இருக்க வேண்டும். வங்கியில் 3 முறையாவது கடன் பெற்று அந்த கடன் தொகையை நிலுவையின்றி திரும்ப செலுத்தியிருத்தல் வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்காணும் தகுதியுடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மகளிர் திட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பங்களை இந்த மாதம் 25-ந் தேதிக்குள் தகுதியான கருத்துரு விண்ணப்ப படிவங்களை செங்கல்பட்டு மகளிர் திட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story