பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்புகலெக்டர் தகவல்


பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்புகலெக்டர் தகவல்
x

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் (ம) புதிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம், புதிய கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்துள்ள தனிதகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் போன்றவற்றை கொண்டதாகும்.

இந்த விருதுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அமைச்சகத்தின் https://awards.gov.in/ என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி விருதுக்கு தகுதியுடைய குழந்தைகள், இந்த விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்க இறுதி நாள் இந்த மாதம் 31-ந்தேதி ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் டெல்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story