இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்


இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 8:02 AM IST)
t-max-icont-min-icon

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். tnesevai.tn.gov.in அல்லது tnega.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ந்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். கிராமங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.3000-ம் நகர்புறத்திற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.6000-ம் செலுத்த வேண்டும். மேலும் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவர் ஆண்டிராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். அல்லது tnega.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே இ-சேவை மையம் ெதாடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story