வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு நிறைவு பெற்ற மனுதாரர்களுக்கும், ஒரு ஆண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையாக கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750-ம், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற வகுப்பினருக்கு 40 வயதுக்குள்ளும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.
மனுதாரர் பள்ளி, கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்து இங்கேயே 15ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தொலைதூர கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறும் காலங்களில் தங்கள் பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மனுக்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
--------------