அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம்
அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
இயற்கைசீற்றம், விபத்து, தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறி, கொள்ளை தீவிரவாத ஊடுறுவல் ஆகியவற்றில் இருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களை காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுயதியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவர்களுக்கு சுதந்திர தின விழாவின்போது மத்திய அரசால் வழங்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க, பாதுகாப்பு பணியாளர்களை தவிர, அனைத்து தரப்பு குடிமக்களும், காவல் படைகள், மத்திய ஆயுத படைகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் தகுதியானவர்கள். தகுதி வாய்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.36-ல் உரிய படிவம் பெற்று வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971168 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
--------------