சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்


சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்மாதிரி விருது

திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். இதை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பாக திருநங்கை ஒருவருக்கு வருகிற ஏப்ரல் 15-ந் தேதி திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியான திருநங்கைகள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும்.

சுய விவரம்

இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் பொருளடக்கம் மற்றும் பக்க எண்(இன்டெக்ஸ்), இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயிர் தரவு சுய விபரம், சுயமரியாதை மற்றும் பாஸ்போட் சைஸ் புகைப்படம்-2, ஒருபக்கம் தனியரை பற்றியவிவரம்(தமிழ்-மருதம் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம்(விருதுபெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம்), கையேட்டில் விருதுபெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

பயனடைந்த விவரம்

பக்கங்களுக்கு கொடிவைக்கவும், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) சேவையை பாராட்டி பத்திரிகை செய்திதொகுப்பு, சமூகசேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்தவிவரம், தொண்டுநிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு-படிவம்(தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.

இன்று மாலைக்குள்...

கையேடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சுசெய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும். மேலும் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story