பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
x

பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகலில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story