முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்,
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2-ம் நிலை காவலர் 1,819 காலிப்பணியிடங்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர் 83 காலிப்பணியிடங்கள், தீயணைப்பாளர் 674 காலிப்பணியிடங்களுக்கான பொதுத்தேர்வில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 129 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்கள் 1-7-2023 அன்று 47 வயதுக்கு மேற்படாதவர்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் ராணுவப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும். படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்கள் விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு ஓய்வு பெற உள்ளவர்களாக இருக்க வேண்டும். எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை 0421 2971127 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
---------------------------------