சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்திற்கு காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 17-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story