மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்


மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி;

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேமிப்பு செய்ததை முறையாக பயன்படுத்தல், வங்கிகடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story