தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசால் தேசிய பெண் குழந்தைகள் தின விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிற பெண்களின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான மற்றும் தனித்துவமான சாதனை செய்திருப்பவர்கள் அது குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மேலும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவற்றை செய்த பெண்குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய பெண் குழந்தைகள் உரிய விபரங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.