சவுதிஅரேபியாவில் நர்சு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சவுதிஅரேபியாவில் நர்சு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரித்தார்
சிவகங்கை
கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதிஅரேபிய அமைச்சகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுவதால் டே்டா ப்ளோ மற்றும் எச்.ஆர்.டி. சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு அந்நாட்டின் வேலை அளிப்போரால் வழங்கப்படும். இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கான முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாம் திருச்சியில் 7-ந் தேதி, நாமக்கல்லில் 11-ந் தேதி, நாகர்கோவிலில் 17-ந் தேதி, வேலூரில் 25-ந் தேதி, கோவையில் செப் 1-ந் தேதி, நெல்லையில் செப் 4-ந் தேதி அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடையவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடம் சேவைக்கட்டணமாக ரூ.35,400 வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.