பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொழில் கல்வியில் முதலாம் ஆண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

தொழில் கல்வியில் முதலாம் ஆண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2023-24-ம் கல்வியாண்டில் தொழில் கல்வியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்திட புதுடெல்லி மைய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொழிற்கல்வியில் முன்னாள் படைவீரர்களது மகன் அல்லது மகளை 2023-2024-ம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு

மேலும், விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-240483 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story