தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்


தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் பெற தகுதியானவர்கள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி. மற்றும் என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் தோ்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி. மற்றும் என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையிட்டுள்ளது.

எனவே, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்த பெற்ற மொழித் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு, தோ்ச்சி பெற்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற இணையதளத்தில் உள்ள நிலையான வழிகாட்டுதலின்படி, உரிய விண்ணப்பத்தை சிவகங்கை, முத்துப்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ 28.2.2023-க்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story