சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்


சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தொழில் முனைவோர்

தொழில் முனைவோர்கள் 2022-2023-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அரசு சார் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

விருதுகள்

அந்த வகையில் சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சிறந்த உணவகம், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர், சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த சுற்றுலா விளம்பரப்படுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், சுற்றுலா கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

15-ந்தேதிக்குள்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் இப்பிரிவுகளில், 2022-2023-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், பூம்புகார் 91769 95843 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story