மகளிர் தங்கும் விடுதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்


மகளிர் தங்கும் விடுதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
x

மகளிர் தங்கும் விடுதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் https://tnswp.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 88388 72443, 75020 34646 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story