கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x

கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையில் பொதுமக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மனைப்பிரிவு அனுமதி கோரி ஆன்லைன் மூலம் (www.Onlineppa.tn.gov.in) விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல் தற்போது கட்டிடங்களின் அனுமதிக்கும் முழுமை திட்ட நிலப்பயன் மாற்றம், விரிவு அபிவிருத்தி திட்ட நிலப்பயன் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களும் ஒற்றை சாளர முறையில் ஆன்லைன் (www.Onlineppa.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.


Next Story