ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட்விற்பனை எந்திரங்களை இயக்க விண்ணப்பிக்கலாம்


ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட்விற்பனை எந்திரங்களை இயக்க விண்ணப்பிக்கலாம்
x

ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட்விற்பனை எந்திரங்களை இயக்க விண்ணப்பிக்கலாம்

திருச்சி

திருச்சி கோட்டத்தில் உள்ள 15 ரெயில் நிலையங்களில் 22 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்த முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளில் இந்த எந்திரங்கள் மூலம் 22.42 சதவீத டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளன. இந்த எந்திரங்களை சுயசேவையாக பயன்படுத்த முடியும். ஆனால் இது குறித்து தெரியாத பயணிகளுக்காக சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் இயக்குபவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக திருச்சி கோட்டத்தில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள், டிக்கெட் சோதனை அலுவலர் மற்றும் வணிக பிரிவில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். திருச்சி கோட்டத்தில் சீர்காழி-3, திருச்சி-6, பூதலூர்-2, தஞ்சை-4, நீடாமங்கலம்-2, கும்பகோணம்-2, திருவாரூர்-1, நாகப்பட்டினம்-2, அரியலூர்-2, விருதாசலம்-2, திருபாதிரிபுலியூர்-2, விழுப்புரம்-1, புதுச்சேரி-1 ஆகிய இடங்களுக்கு தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள். விண்ணப்பிப்பவர்களுக்கான நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய முதன்மை புக்கிங் கண்காணிப்பாளரிடமோ அல்லது முதன்மை வணிக ஆய்வாளரிடமோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story