இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலரால் இ-சேவை மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் "https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in" என்ற முகவரியில் விண்ணப்பங்களை 30-ந் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000, நகர்ப்புறத்திற்கு ரூ.6000 செலுத்த வேண்டும். மேலும். அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை https://tnega.tn.gov.in இணையதளத்தின் மூலம் காணலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.