பதவி உயர்வு பெற்ற 46 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பணி நியமனம் -அரசு உத்தரவு


பதவி உயர்வு பெற்ற 46 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பணி நியமனம் -அரசு உத்தரவு
x

தமிழக போலீஸ் துறையில் சமீபத்தில் 64 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். அவர்களில் 46 பேருக்கு நேற்று பணி நியமனம் வழங்கி அரசு உத்தரவிட்டது.

சென்னை,

சத்தியமூர்த்தி- செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு, யுவராஜ்- சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு, வேல்முருகன்- செங்கல்பட்டு மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டு, நடேசன்- ஆவடி கமிஷனரக சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர். முத்துவேல் பாண்டி- ஆவடி கமிஷனரக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர்.

வெற்றி செழியன் - மாநில சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு சார்லஸ் ஷாம் ராஜதுரை- காஞ்சீபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு. அர்னால்டு ஈஸ்டர்- ஆவடி கமிஷனரக உளவுப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர். குமரகுருபரன் - சென்னை கிழக்கு பயிற்சி பிரிவு கூடுதல் துணை கமிஷனர்.

அரிகுமார்- திருவள்ளூர் மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டு. லட்சுமணன் - சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு. கலைச்செல்வன்- தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் சூப்பிரண்டு.

பிரகாஷ்- தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் சூப்பிரண்டு. ரமேஷ்பாபு- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் சூப்பிரண்டு. கனகராஜ் ஜோசப்- சென்னை தலைமையக கியூ பிரிவு கூடுதல் சூப்பிரண்டு.

முத்தமிழ்ச்செல்வன்- தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story