நகராட்சி நிர்வாகத் துறை வழிகாட்டு குழுவில் பேரமைப்பு நிர்வாகிகள் நியமனம்- விக்கிரமராஜா வரவேற்பு


நகராட்சி நிர்வாகத் துறை வழிகாட்டு குழுவில் பேரமைப்பு நிர்வாகிகள் நியமனம்- விக்கிரமராஜா வரவேற்பு
x

நகராட்சி நிர்வாகத் துறை வழிகாட்டு குழுவில் பேரமைப்பு நிர்வாகிகள் நியமனமனத்துக்கு விக்கிரமராஜா வரவேற்பு அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிக் கடைகளுக்கான வாடகை முரண்பாடு, பெயர் மாற்றம், புதிய கடைகள் ஒதுக்கீடு, சம்பந்தமாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண "வழிகாட்டுதல் குழு" அமைத்துள்ளது.

அக்குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பிரதிநிதிகளாக பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, வேலூர் மாவட்டத் தலைவர் ஞான வேலு ஆகியோரை நியமனம் செய்தது வரவேற்கதக்கது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story