நகராட்சி கமிஷனர் பொறுப்பில் என்ஜினீயர் நியமனம்


நகராட்சி கமிஷனர் பொறுப்பில் என்ஜினீயர்  நியமனம்
x

நகராட்சி கமிஷனர் பொறுப்பில் என்ஜினீயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்


மாநிலம் முழுவதும் 20 நகராட்சிகளில் கமிஷனர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்த நகராட்சிகளில் நிர்வாக காரணங்களுக்காக நகராட்சி என்ஜினீயர்கள் சம்பளப்பட்டியல், மின்வாரியம் மற்றும் டெலிபோன் பில்கள் வழக்கமான கோப்புகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றில் கையெழுத்திட அதிகாரம் வழங்கி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் விருதுநகர் நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லி பாபு பதவி உயர்வு பெற்று சேலம் மாநகராட்சி உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்தநிலையில் விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் மணி, நகராட்சியின் சம்பளப்பட்டியல் உள்ளிட்ட கோப்புக்களில் கையெழுத்திட அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Next Story