கூட்டுறவு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகக்குழு தலைவர், இயக்குனர்கள் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகக்குழு தலைவர், இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டனர்
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென புதிய மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கான புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஞானவேலன், துணைத்தலைவராக சண்முகம் உள்ளிட்ட 19 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த பதவி ஏற்புக்கூட்டத்தில் மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், துணைப் பதிவாளர் ராஜேந்திரன், மண்டல மேலாண்மை இயக்குநர் குணபாலன், மேலாளர் அமீருதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும், மாயூரம் கூட்டுறவு நகர வங்கி சார்பில் கூட்டுறவு கல்வி நிதி மற்றும் கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 32 க்கான காசோலையை வங்கியின் பொது மேலாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வழங்கினார்.