குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரி நியமனம்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ராணிப்பேட்டை மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக கோபிநாத் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
அவரை கூடுதலாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த குறைகளை நிவர்த்தி செய்திட பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொது மக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியான கோபிநாத் என்பவரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் புகார் மனுக்களை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராணிப்பேட்டை என்ற முகவரி மற்றும் ombudsperson.rpt@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.