உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்


உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கோமதி. அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோமதி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மாநகர உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அதியசராஜ், மாவட்ட பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ், மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநகர உளவுப்பிரிவுக்கு, திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே நெல்லை மாவட்ட கியூ பிரிவில் பணிபுரிந்துள்ளார்.


Next Story