பிரதமரின் குடியிருப்பு திட்ட குறை தீர்ப்பு அலுவலர் நியமனம்


பிரதமரின் குடியிருப்பு திட்ட குறை தீர்ப்பு அலுவலர் நியமனம்
x

பிரதமரின் குடியிருப்பு திட்ட குறை தீர்ப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக விருதுநகர் மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்கண்ட குறை தீர்ப்பு அலுவலரை கூடுதலாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியான பெரியசாமி என்பவரை 63698 76887 மற்றும் 89258 11346 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் பிரதமரின் குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் புகார் மனுக்களை மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story