திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம்


திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
x

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள பரணி மற்றும் மகா தீபத் திருவிழாவினை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பு பணி அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் வரவேற்று கோவிலுக்கு அழைத்து வருதல், தங்கும் குடில்களில் உணவு உபசரித்தல், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு அழைத்து செல்வது, பரணி தீப ஏற்பாடுகள், பஞ்சமுர்த்திகள் புறப்பாடு உரிய நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்தல், கிரிவலப்பாதையை கண்காணித்தல், கோவில் வளாகம் தூய்மைப்பணி, அன்னதானக்கூடம், இணையதள அனுமதி சீட்டு கண்காணித்தல், நெய்குட காணிக்கை, உள்துறை அலுவலகம், மருத்துவ முகாம்கள், அடிப்படை வசதிகள் பந்தல் மற்றும் பக்தர்கள் வரிசை, அனுமதி சீட்டு வினியோகம், மின் அலங்கார ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பது, பக்தர்கள் தங்கும் விடுதி, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவுகள் ஆகியவற்றை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story