100 நாள் வேலை திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு அதிகாரி நியமனம்

100 நாள் வேலை திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு அதிகாரி நியமனம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு அதிகாரி நியமனம்

தேசிய ஊரக வேலை உறுதி் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் நிவர்த்தி செய்ய சிறப்பு அதிகாரியாக முருகேசன் என்பவர் நாகை மாவட்டத்திற்கான நியமிக்கப்பட்டுள்ளார்.

புகார் தெரிவிக்கலாம்

இந்த சிறப்பு அதிகாரியின் செல்போன் எண். 8925811317 மற்றும் மின்னஞ்சல் முகவரி (ombudsman.nagai@gmail.com) மூலம் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story