கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் நியமனம்: பகண்டை கூட்டுரோட்டில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் நியமனம்:  பகண்டை கூட்டுரோட்டில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டதையொட்டி பகண்டை கூட்டுரோட்டில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் எம். எல்.ஏ. மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பகண்டை கூட்டு ரோட்டில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, நிர்வாகிகள் கோவிந்தராஜன், ராஜூ, செல்வம், பத்மநாபன், செல்வகுமார், அய்யனார், சிவமுருகன், சுகுமாரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மணலூர்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


Next Story