பணி நியமன ஆணை வழங்கும் விழா
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழாநடைபெற்றது.
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சால்கம் நிறுவனத்தின் மூலம் வளாக நேர்காணல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நேர்காணலில் கலந்து கொண்ட மாணவிகளில் 51 மாணவிகள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களது மாத ஊதியம் ரூபாய் 18000 ஆகும்.
வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 மாணவிகளுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிகளின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கி தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசியனார். அப்போது கற்ற கல்வியின் துணைகொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். தேங்கிய நீராக இல்லாமல் ஓடுகின்ற நதிநீரை போல் பன்முகத் திறமையை வளர்த்துக் கொண்டு மேன்மை பெற வேண்டும் என்றார்.
இதில் கல்லூரி பொருளாளர் ஏ.என்.சரவணன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ராஜலட்சுமி வரவேற்று பேசினார். அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கினர்.
முடிவில் வணிகவியல் துறை தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.