129 பேருக்கு பணி நியமன ஆணை


129 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 23 July 2023 1:15 AM IST (Updated: 23 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

129 பேருக்கு பணி நியமன ஆணை

கோயம்புத்தூர்

கோவை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்ற 129 பேருக்கு பணி நியமன ஆணையை மத்திய மந்திரி நாராயணசாமி வழங்கினார்.

129 பேருக்கு பணிநியமன ஆணை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடந்தது. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வணிகவரித்துறை தலைமை ஆணையாளர் சீமா ராஜ், முதன்மை ஆணையாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு கோவை மண்டலத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்ற 129 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்க ளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் தபால்துறை, எல்.ஐ.சி. ரெயில்வே துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற நியமன ஆணை வழங்கப்பட்டது.

பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற 70 ஆயிரம் பேருக்கு இன்று (நேற்று) பணிநியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் உள்ளனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பா.ஜனதா ஆட்சி செய்து வரும் இந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

வேங்கைவயல் விவகாரம்

ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் அரசாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் மனித நாகரீகத்துக்கு எதிரானது. சகித்துக்கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத சம்பவம். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அரசியல் கட்சி வேறுபாடுகளை தாண்டி எந்த பெண் பாதிக்கப்பட் டாலும் அவர்களுக்கு பா.ஜனதா துணை நிற்கும். வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூகநீதி பேசும் இந்த அரசுக்கு வேங்கை வயல் விவகாரம் கரும்புள்ளியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story