ஊர்க்காவல் படைக்கு தேர்வான 36 பேருக்கு பணி நியமன ஆணை
ஊர்க்காவல் படைக்கு தேர்வான 36 பேருக்கு பணி நியமன ஆணை
தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வான 36 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முதன் முறையாக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை
தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர்(திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருநங்கை தேர்வு
நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 45 நாட்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.