அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் வழங்கினார்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு அங்கன்வாடி பணி நியமன ஆணைகளை 7 பேருக்கு வழங்கினார்.
இதில் திருச்செந்தூர் அருகே உள்ள வரண்டியவேல் பகுதியைச் சேர்ந்த திவ்யா வெங்கடேஸ்வரி, சாத்தான்குளம் அருகே உள்ள கீழ நொச்சிகுளத்தைச் சேர்ந்த சாரோனின் ரோஜா வினோதா, கோவில்பட்டி அருகே உள்ள முத்துநகர் பகுதியைச் சேர்ந்த ரமணா ஆகியோருக்கு அங்கன்வாடி பணியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கொம்மடிக்கோட்டை அருகே உள்ள போலையார்புரம் பகுதியைச் சேர்ந்த ஜென்ஸி, மேலசண்முகபுரம் பகுதியைச்சேர்ந்த பத்திரகாளி, தளவாய்புரம் வன்னியங்காடு பகுதியைச் சேர்ந்த காவ்யா, ஆழ்வார் திருநகரி ஆதிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த விநாயகசுந்தரி ஆகியோருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (தூத்துக்குடி) ரூபி பெர்னாண்டோ, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (திருச்செந்தூர்) காயத்ரி, மாநகர தி.மு.க. செயலர் ஆனந்தசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.