பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை மூலம் நடத்தப்பட்ட வளாக நேர்காணல்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதிமணி அம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அல்டி மெட்ரிக் நிறுவன மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரி பிரதீபன் மகேந்திரன், வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் கல்வி நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் சந்திரசேகர், கல்லூரி வேலைவாய்ப்பு துறை அலுவலர் முகமது நைனா ஆகியோர் வேலைவாய்ப்பு செயல்பாடுகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.