தர்மபுரியை சேர்ந்தஓய்வு பெற்ற கப்பல் படை வீரர்களுக்கு பாராட்டு
தர்மபுரி
தர்மபுரி
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா பவள விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த கப்பல் படை வீரர்கள் சிங்காரம் (வயது 91), மாதையன் (89) ஆகியோருக்கு பாராட்டு விழா ஒட்டப்பட்டியில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி பிரிவு லெப்டினன்ட் கமாண்டர் குஷ்வந்த் கலந்து கொண்டு வயதில் மூத்த முன்னாள் கப்பல் படை வீரர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேஷ் குமார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அசோக் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story