அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு


அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு
x

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பெரியார் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் இறுதி ஆண்டு மாணவர் கோகுல் வெற்றி பெற்று, தர்மபுரி மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்தார். இவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவன் கோகுலை கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், தமிழ்த்துறை தலைவர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


Next Story